free website hit counter

சிங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்த சிவகார்த்திகேயன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

அதைபோல் அவர் நடித்துள்ள அறிவியல் புனைவு திரைப்படமான அயலான் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இயக்குநர் அட்லீயுடைய உதவியாளர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 
இவை ஒருபக்கம் இருக்க சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தின் தகவல் கசிந்துள்ளது. இயக்குநர் அட்லியின் மற்றொரு முன்னாள் உதவியாளர் அசோக் என்பவர் இயக்கத்தில் அப்பா - மகன் இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு சிங்கப்பாதை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்படத்தை கே.ஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு டி.இமான் இசையமைக்கயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: