free website hit counter

கமலின் ‘விக்ரம்’ கதையில் ஒரு விக்கல்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எத்தனை சிறந்த இயக்குநராக இருந்தாலும், கமல் தான் நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கிவிடுவார்.

இதனால் வெற்றி கொடுத்த இயக்குநர் பேந்தப் பேந்த விழித்துகொண்டிருப்பார். தற்போது அதுதான் விக்ரம் படத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். கைதி, மாநகரம், மாஸ்டர் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட கமல், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் அதை தயாரித்தும் வருகிறார் கமல்.

தற்போதுவரை எடுத்த படத்தின் ஃபுட்டேஜ் மட்டுமே 5 மணி நேரம் இருக்கிறதாம். கதையிலும் காட்சிகளிலும் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்துகொண்டே வரும் கமல், படத்தை இரண்டு பாகமாக வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தனது கதை படும் பாட்டை நினைத்து விக்கிக்கொண்டு நிற்கிறார் இயக்குநர் லோகேஷ் என்கிறார். இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வில்லனாக்ல பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து முடித்துள்ளனர். கமல் ஏற்றுள்ள விக்ரம் கதாபாத்திரமும் வில்லன் கேரக்டர் மாதிரிதான் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: