இயக்குநர் மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், விளம்பரப்பட இயக்குநர் ஜெயேந்திரா இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் நெட்பிளிக்ஸில் தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.
முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து இந்த கனவு படைப்பினை நிகழ்த்தியிருக்கிறார்கள்.கொகரோனா நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின் பேரில் பணிபுரிந்துள்ளார்கள். அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 இயக்குநர் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தைகுறும்படங்களாக தந்துள்ளனர்.
ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள குறுப்படங்களின் விபரங்கள் :
1. தலைப்பு - எதிரி (கருணை)
இயக்குநர் - பெஜோய் நம்பியார்
நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி
2. தலைப்பு - சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை )
இயக்குநர் - ப்ரியதர்ஷன்
நடிகர்கள் - யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு
3. தலைப்பு -புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)
இயக்குநர் - கார்த்திக் நரேன்
நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா
4. தலைப்பு - பாயாசம் ( அருவருப்பு )
இயக்குநர் - வசந்த் S சாய்
நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்
5. தலைப்பு - அமைதி ( அமைதி )
இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் - சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்
6. தலைப்பு - ரௌத்திரம் ( கோபம் )
இயக்குநர் - அர்விந்த் சுவாமி
நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்
7. தலைப்பு - இண்மை ( பயம் )
இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத்
நடிகர்கள் - சித்தார்த், பார்வதி திருவோர்து
8. தலைப்பு - துணிந்த பின் (தைரியம்)
இயக்குநர் - சர்ஜூன்
நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்
9. தலைப்பு - கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )
இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்