free website hit counter

செல்வராகவனைப் பழிவாங்கும் கீர்த்தி சுரேஷ்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பழிவாங்கும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘சாணிக் காயிதம்’. இப்படம் தமிழ்,
தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும் மற்றும் 240 நாடுகளில் மே மாதம் 6 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கப்பட்டுள்ள ‘சாணிக் காயிதம்’ படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

பொன்னி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். பொன்னிக்கும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது, தற்போது வெளியாகியிருக்கும் டிரைலர் காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த சங்கையாவும் அந்த ஆண்கள் கூட்டத்தின் நீட்சியே என்பதைப் புரிந்துகொள்ளும் பொன்னி அவனையும் தண்டிக்க முன்வருகிறாள். ஆனால் அது முடிந்ததால் இல்லையா என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர். சங்கையா கதாபாத்திரத்தில் செல்வராகவன் தோன்றுகிறார். மலையாளத்திலும் சாணிக்காயிதம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.

டீசர் இணைப்பு : https://youtu.be/cBa6idXJoj4

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction