free website hit counter

வெற்றிமாறனுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து கலைப்புலி தாணு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘கபாலி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனியார் விமானங்களின் உடல் முழுவதும் ஒட்டி விளம்பரம் செய்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்ய நினைக்கும் இவர் நன்கொடை கொடுப்பதிலும் தன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் ஏழை மற்றும் விளம்பு நிலைச் சமூகங்களிலிருந்து திரைப்படத்துறைக்கு வரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ‘நாம் அறக்கட்டளை’ என்ற ஒன்றைத் துவக்கினார். அதன் சார்பாக ‘திரை - பண்பாடு ஆய்வக’த்தையும் (Screen Culture Lab) அவர் துவக்கியுள்ளார் .

இதன் மூலம், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின்
வீடுகளுக்கு நேரடியாக சென்று , உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை அவர் உருவாக்கி இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார் .

இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி எஸ். தாணு முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேலிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது தன்னுடைய வி கிரியேஷன் பட நிறுவனத்தில் முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும்" என்றும் அறிவித்தார்.

‘நாம் அறக்கட்டளை’யை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த சென்னை, லயோலா கல்லூரியின் முன்னாள் ஊடகத்துறைப் பேராசிரியர் பாதிரியார் ராஜா நாயகம் உடன் இருந்தார். தற்போது முதல் தொகுதி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

-4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction