free website hit counter

அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் இவர்தான்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.

அவருடைய இயக்கத்தில் தனது 61-வது படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனத் தெரிகிறது. அடுத்தாக, அஜித்தின் 63- வது படத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக 4 படங்களில் அஜித்தை இயக்கிய சிவா இயக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரபரத்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த இயக்குனர் சிவாவிடம் அஜித்தின் 63வது படத்தை இயக்குகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவா “இதை அஜித் சாரே அதிகாரப்பூர்வமாகச் சொல்லுவார். நான் சொல்வது சரியல்ல” எனக் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction