free website hit counter

கோவா படவிழாவில் தங்க மயில் விருதை தட்டிசென்ற ஜப்பானியப் படம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோவாவில் நடைபெற்றுவரும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சர்வதேச அளவிலான திரைப்பட போட்டிக்கான நடுவர் குழு தலைவரும் , ஈரானிய திரைப்பட தயாரிப்பாளருமான ரக்ஷன் பெனிடெமாட் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களும் கலைஞர்களுமான சிரோ குவேரா, விமுக்தி ஜெயசுந்தரா, நிலா மதாப் பாண்டா உள்ளிட்ட நடுவர் குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர்.

திரைப்படங்களைத் தேர்வுசெய்த அனுபவம் பற்றி நடுவர் குழு தலைவரும் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளருமான ரக்ஷன் பெனிடெமா கூறும்போது, பல்வேறு நாடுகளிலிருந்து பல விதமான திரைப்படங்களைத் தேர்வு செய்ததைத் தாம் மிகவும் ரசித்ததாகவும் இது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்றும் கூறினார். "திரைப்பட தயாரிப்பு, பார்வையிடுதல், தேர்வு செய்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை பாலின அடிப்படையில் வேறுபாடு எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பாலினத்தை விட நிபுணத்துவம் திறமையில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். இதனைத் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள் செய்ய வேண்டும்." திரைப்பட தயாரிப்பு மற்றும் தேர்வு செய்த கண்ணோட்டத்தில் பாலின அம்சத்தின் முக்கியத்துவம் பற்றிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இந்திய சினிமா உயிர்த்துடிப்போடும் பன்முகத் தன்மையோடும் இருப்பதாக கொலம்பியாவின் திரைப்பட இயக்குநரும் சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு உறுப்பினருமான சிரோ குவேரா கூறினார். இந்திய சினிமாவின் கற்பனை உண்மையில் வியப்பளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இது உண்மையிலேயே கௌரவமிக்க திருவிழா என்றும் இதில் நடுவர் குழுவில் பங்கு வகித்ததற்கு பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்றின் தாக்கம் திரைப்படங்களில் இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடுவர் குழு உறுப்பினரான பிரபல இலங்கை திரைப்பட இயக்குனர் விமுக்தி ஜெயசுந்தரா கூறுகையில், கேமராவின் பின்னணியில் பெருந்தொற்றின் தாக்கம் இருந்திருக்க வேண்டும், அதில் நிறைய சவால்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் திரைப்படங்களில் இவை பிரதிபலிக்கவில்லை என்று கூறினார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் தெரிவில் பன்முகத்தன்மையும் சிறப்பம்சமும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"சில நேரங்களில் ஓர் இயக்குநர் கதையோடு பல ஆண்டுகள் பயணிப்பார்; திரைப்படமாக உருவாக்குவதற்கும் நீண்ட காலம் பிடிக்கும். மேலும் இந்தத் திரைப்படங்கள் பெருந்தொற்று காலத்தை மட்டும் சார்ந்ததாக இருக்கவில்லை" என்று நடுவர் குழுவின் மற்றொரு உறுப்பினரான நிலா மதாப் பண்டா கூறினார்.

விருதுபெற்ற படங்கள்

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்படம் ‘ரிங் வாண்டரிங்’ தங்க மயில் விருதை வென்றது.

சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை, ‘சேவிங் ஒன் ஹூ இஸ் டெட்’ படத்தின் இயக்குனர் வேக்லவ் கதர்ன்கா வென்றார்.

இந்திய மற்றும் மராத்தி நடிகர்கள் ஜித்தேந்திர பிகுலால் ஜோஷி, நிஷிகாந்த் காமத் ஆகியோர் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை வென்றனர்.

ஸ்பெயின் நடிகை ஏஞ்சலா மோலினா சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை வென்றார்.

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ்..

நடுவர்களின் சிறப்பு விருதை ‘கோதாவரி’ படத்தை இயக்கிய மராத்தி இயக்குனர் நிகில் மகாஜன், பிரேசில் நடிகை ரெனாட்டோவுடன் பகிர்ந்து கொண்டார்.

‘தி டோரம்’ படத்தை இயக்கிய ரஷ்ய இயக்குனர் ரோமன் வாஷ்யனோவ், சிறப்பு விருதை பெற்றார்.

முதல் முறையாக திரையிடப்பட்ட படங்களில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் மாரி அலெஸ்ஸாண்டிரினியின் ‘ஜகோரி’ தேர்வு செய்யப்பட்டது.

ஸ்பெயின் திரைப்படம் ‘தி வெல்த் ஆப் த வோர்ல்ட்’ சிறப்பு விருதை பெற்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula