free website hit counter

ஹாலிவுட்டில் நுழைகிறார் சமந்தா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தென்னிந்திய சினிமாவின் வசீகரமான கதாநாயகியாக  வலம் வருபவர் சமந்தா ரூத் பிரபு. பாலிவுட்டில்

‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரில் மனித வெடிகுண்டு வேடத்தில் நடித்து  அறிமுகமானார். உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த இணையத் தொடரில் அவருடைய நடிப்பைப் பார்த்து ஹாலிவுட் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது.

பிரபல பிரிட்டிஷ் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் தமிழ் பெண்ணாக டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதுவொரு பை செக்ஸுவல் வேடம் என இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு  ‘அரேஜ்மென்ட் ஆஃப் லவ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படத்தில் நடிக்க தான் தேர்வானதை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அவர் தனது பதிவில் “ஒரு புதிய உலகம்...! நான் கடைசியாக 2009 ஆம் ஆண்டு விடிவி தெலுங்குப் படத்துக்காக ஆடிஷன் செய்தேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தற்போது ஆடிஷன் செய்தபோது, நான் பதற்றத்தை உணர்ந்தேன்… பாப்டா விருது பெற்ற, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, உங்களுக்கு மிகவும் பிடித்த தொடரான ‘டவுண்டன் அபே’யின் இயக்குனருக்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறேன் சார். வாய்ப்புக்கு நன்றி! இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது!” என உணர்ச்சி வசப்பட்டு பதிவிட்டுள்ளார்.  

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: