free website hit counter

அஜித் - ஷாலினி காதல் நடனம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எவ்வித பின்புலமும் இல்லாமல், சொந்தத் திறமையில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருப்பவர்
அஜித். தன்னை இனி யாரும் தல என்று அழைக்கக் கூடாது என தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டதுடன் ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர். இவரது நடிப்பில் வெளியான வலிமை படம், எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சாதித்தது. வலிமை பட வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். வலிமை வெற்றியைக் கொண்டாட, தனது குடும்பத்தினருடன் அஜித்குமார் பார்ட்டிக்கு சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

பார்ட்டி ஒன்றில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ரொமான்டிக்காக நடனம் ஆடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ஷாலினியின் தங்கை ஷாமிலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமர்க்களம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலில் விழுந்த அஜித் - ஷாலினி இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படம் வெளியானதையொட்டி அஜித் ரசிகர்கள் இப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து அண்ணா மற்றும் அண்ணி என மகிழ்ந்து வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction