free website hit counter

கோலிவுட்டுக்கு இன்னுமொரு நயன்தாரா அறிமுகம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன், காதலன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய, பிரம்மாண்டத் தயாரிப்பாளராக அறிமுகமானவர் குஞ்சுமோன்.

தற்போது 'ஜென்டில்மேன்2' என்ற பிரமாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக திரை உலகிலும் சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் கதாநாயகி யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்து கதாநாயகி பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன்.

நடிகர்கள் ரஜினி காந்த், மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி தான் அந்த அறிமுக கதாநாயகி. ஏற்கெனவே கோலிவுட்டில் ஒரு நயன் தாரா இருக்கும்போது புதிதாக ஒரு நயன்தாராவை இவர் அறிமுகப்படுத்துகிறார்.

இன்னொரு கதாநாயகியும் ஜெண்டில்மேன் 2 படத்தில் உள்ளதாகவும், அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன். அது யார் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் படத்தின் இயக்குநர், கதாநாயன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இம்முறை திட்டமிட்டு சமூக வலைதளம் மூலமாகவே அனைத்தையும் அறிவித்து வரும் இவர், இனி மக்கள் தொடர்பாளர்களே தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: