‘உலகம்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் 96, மாஸ்டர் படங்களில் நடித்த கௌரி கிஷன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
1970-ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை ‘உலகம்மை’. மறைந்த முதுபெரும் எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது.
இப்படத்தின் கதையைக் கேட்ட இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆடு மேய்க்கும் கீதாதாரிப் பெண்ணாக நடிக்கும் கௌரி கிஷனின் முதல் பார்வை படத்தையும் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது படக்குழு.