free website hit counter

சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கும் ஜி.பி.முத்து !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டிக் டாக் ஆப்பில் பிரபலமாக இருந்த நகைச்சுவையாளர் ஜி.பி.முத்து. தமிழ் நாட்டின் நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் பக்கம் ஒன்றை தொடங்கி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

அப்பாவி போல நடிக்கும் அவரது பாணியை, ரசிகர்கள் பொய் எனத் தெரிந்தும் ரசிக்கிறார்கள். அதேபோன்று அவரை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களை அவர் கோபமாக திட்டுவதற்கும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜி.பி.முத்து திரைப் படத்தில் அறிமுகமாகிறார். சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஜி.பி.முத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் சன்னி லியோனுடன் அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளன. நடிகர் சதீஷ்,‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் திகில் காமெடி படமான இதில்தான் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் ஜி.பி.முத்து தவிர மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் என்பவர் இயக்கும் படம்.

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: