free website hit counter

இயக்குநர் ராம் சோதனை முயற்சி : கதாநாயகி இல்லாத படம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி. ‘பிரேமம்’ படம் தமிழ் நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியதால், நிவின் பாலிக்கு இங்கேயும் ரசிகர்கள் உண்டு.

பின்னர் 2017-ல் ‘ரிச்சி’ என்ற நேரடித் தமிழ் படத்தில் நடித்தார் அது தோல்வி அடைந்தது. தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நேரடித் தமிழ் படத்தில் நடிக்கிறார்.

அதாவது, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அடுத்து ராம் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கவிருக்கிறார்கள் இதில்தான் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சூரியும் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். அவர்கள் இருவர் உட்பட 4 கதாபாத்திரங்களை மையமாக வைத்து படத்தின் பெரும்பகுதி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகி இல்லை. ராம் படங்களில் கதாநாயகியின் கதாபாத்திரங்களே இதுவரை அதிகம் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும். இதில் கதாநாயகியே இல்லை என்பது, இயக்குநர் ராமின் ரசிகர்கள் வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: