free website hit counter

விஜயின் ஜனநாயகன் 2026 ஜனவரியில் வெளியாகிறது !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயின் கடைசிப்படமான 'ஜனநாயகன்', அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சி வருபவர் விஜய். தமிழ்நாடு கடந்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும், இலங்க உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.  திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபம் ஈட்டித்தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து கொண்டிருக்கும்போதே, திடீரென அரசியல் பாதையை விஜய் தேர்வு செய்தார்.

கடந்தாண்டு விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் மாநில அரசியல் கட்சியை தொடங்கினார். அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் விஜய் அறிவித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தமது கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை விஜய் வெளியிட்டார்.

தீவிர அரசியலில் இறங்கும் முன்பாகவே ஒப்புக் கொண்ட படத்தில் நடிப்பதாக தெரிவித்த விஜய், வருகிற மே மாதத்தில் தீவிர அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவரது கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நடிகர் விஜயின் 69ஆவது மற்றும்  கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாகும் தேதியை, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,  அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அதாவது ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன திரைப்படம் வெளியாக உள்ளது என்று, இப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜனநாயகன் திரைப்படத்தில், அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். வினோத் ஏற்கெனவே, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.  ஜனநாயகன் திரைப்படத்தில்  விஜயுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதவ் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

விஜயின் திரைப்பட வெளியீடு குறித்த தகவல், அவரது ரசிகர்களை ஒருபுறம் உற்சாகமடைய செய்தாலும், இதுதான் என்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula