அரசியலுக்கு சென்றாலும் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, விஜய் அரசியலுக்கு சென்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் எனவும் அவர் பெரிய என்டர்டெய்னர் என்றும் நடிகர் சசிகுமார் தெரிவித்தார். அதேபோல் பத்மபூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறினார்.