free website hit counter

திருமணத்திகதியை முடிவு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர்

. அதன்பின்னர் ஐரோப்பிய கலாசாரமான ‘லிவிங் டுகெதர்’ முறையில் இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே இவர்களுடைய திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு நயன்தாரா அளித்த பேட்டியில் “எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நிச்சாயதார்த்தம் நடந்து முடிந்தது. எங்கள் திருமணம் பற்றி அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக நயன் தாராவின் மேக் அப் மேனான ராஜு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துகொண்டனர். இதனிடையே, இருவரும் தங்களது திருமணத்தை திருப்பதியில் நடத்தப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அவர்களின் திருமண தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: