free website hit counter

பொங்கி எழுந்த சிரஞ்சீவி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ஆச்சார்யா என்ற படம் வெளியானது.

இந்த படத்தின் ஊடகர் சந்திப்பில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்: “இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா என்று எண்ணும் அளவிற்கு ஒருகாலத்தில் அந்த மொழி திரைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டன. பிராந்திய மொழி திரைப்படங்கள் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்ட போதிலும், இந்திப் படங்களே தேசிய அளவில் பேசப்படாது.

அதேபோல், கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான ‘ருத்ரவீணா’ திரைப்படதிற்காக எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நானும், படக்குழுவினரும் சேர்ந்து விருதை வாங்குவதற்காக டெல்லிக்கு சென்றோம். விழாவுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சியில், இந்தி சினிமா நட்சத்திரங்களின் போஸ்டர்கள் வைத்து மட்டுமே அரங்கம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியில் இந்திய திரைப்படங்களுக்காக காண்பிக்கப்பட்ட பிரத்தியேக காட்சியில் இந்தி திரைப்படங்களின் காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டது . தென்னிந்திய திரைப்படங்கள் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். , ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. தென்னிந்தியாவில் என்.டி. ராமாராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராஜ்குமார், போன்ற ஏராளமான நடிப்பு சக்கரவர்த்திகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள். அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தி நடிகர்கள் மட்டுமே அது போன்ற நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியில் நான் அவமானப்பட்டேன்.

ஆனால், இப்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைக் கொள்ள செய்திருக்கின்றன. தெலுங்கு திரையுலகில் இருக்கிறேன் என இப்போது மார்தட்டி என்னால் சொல்ல முடியும். தெலுங்கு சினிமா இன்று இந்திய திரையுலகின் ஓர் அங்கமாக மாறிவிட்டது” என பொங்கியெழுந்து பேசினார். இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப்க்கும் இடையே நடந்த இந்தி மொழி குறித்த சர்ச்சைக்கு பிறகு சிரஞ்சீவியின் உணர்ச்சிகரமான இந்தப் பேச்சு இணையத்தில் தீபோல பரவி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction