free website hit counter

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் சாய் பல்லவி !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாரி 2 படத்தில் ‘ரவுடி பேபி’ பாடலுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரம் ஆனார் சாய் பல்லவி. நானி ஜோடியாக ‘சியாம் சிங்கா ராய்’ படத்தில் அட்டகாசமான நடிப்பையும் நடனத்தையும் கொடுத்து மேலும் புகழ் பெற்றார்.

அவருக்கு நேற்று பிறந்த நாள். இணையத்தில் நெட்டிசன்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் குவித்தனர். இந்நிலையில், அவருக்கு கமல்ஹாசன் மிகப்பெரிய பிறந்த நாள் ‘சர்ப்பிரைஸ்’ ஒன்றை கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21-வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை கமல் அலுவலகம் அதிகாரப்பூர்வ புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. இதற்காக கமல்ஹாசனை சாய் பல்லவி சந்தித்துள்ளார். இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: