தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
‘தமிழ் படம் 2’, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த, ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தமிழில் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்க இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய மூன்றுவாது தெலுங்கு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ராம் பொத்தினேனி நடிக்கவிருக்கும் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட இருக்கிறது. தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கையோடு தற்போது தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொள்ளவுள்ளார். இது தவிர தற்போது சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
