free website hit counter

சொந்த மண்ணுக்குத் திரும்பும் பாவனா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகையான பாவனா.

அதன்பின்னர், ஜெயம் ரவியின் ‘தீபாவளி’, அஜித்தின் ‘அசல்’உட்பட சில முன்னணிக் கதாநாயகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தார். அதேசமயம் மலையாள, கன்னடப் படங்களில் நடித்தும் புகழ்பெற்றார். மலையாளத்தில் கடைசியாக, பிருத்விராஜ் ஜோடியாக ‘ஆடம்ஜான்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் கடந்த 2017-ல் வெளியானது.

அதே 2017-ஆம் ஆண்டில் வெளிப்புற படப்பிடிப்பு முடிந்து தன்னுடைய சொந்த நகரமான கொச்சிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது பாவனா மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அவர் வந்த வாகனத்தை வழிமறித்து ஒரு கும்பல் அவரைக் கடத்தியதாக கேரளமே கிடுகிடுத்தது. அந்த கடத்த வழக்கில் மலையாள நாயகன் திலிப் உட்பட பலர் மீது வழக்குகள் நடந்து வருகிறது. அந்தச் சம்பவத்துக்குப்பின் மலையாளத் திரையுலகிலிருந்து விலகியிருந்த பாவனா, கன்னடத் தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கன்னட சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் 5 வருட இடைவெளிக்கு பின் தனது தாய்மொழியான மலையாளத்தில் மீண்டும் நடிக்கிறார் பாவனா. ‘என்டிக்காக்கொரு பிரேமமுண்டார்நு’என்ற படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதை அடில் மைமூநாத் அஷ்ரப் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்மூட்டி, நடிகை பாவனா உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction