free website hit counter

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் பிரேம்ஜி.

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘டான்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிவருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன. சிவகார்த்திகேயனின் 20-வது படமாக உருவாகும் இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது காரைக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை, புதுச்சேரி மற்றும் லண்டனிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் ஏற்கனவே நடிகர் பிரேம்ஜி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதில் இன்னும் கூடுதல் தகவலாக சிவகார்த்திகேயனுக்கு பிரேம்ஜி வில்லனாக நடிக்கவிருப்பதாக சிவகார்த்திகேயன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாக உள்ளதால் இந்த காம்பினேஷன் நிச்சயம் சூப்பர் ஹிட்டடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: