லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் அவர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கிவரும் ‘விக்ரம்’படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், பிக்பாஸ் ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ‘விக்ரம்’ உலகம் முழுக்க வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அனைத்து மொழிகளிலும் 112 கோடிக்கு ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்று பாடல்கள் எண்ணிக்கை குறித்து தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது படத்தில் மொத்தம் 3 பாடல்கள் மட்டும் தான் எனவும், 3 தீம் மியூசிக் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. விரைவில் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை அடுத்தவாரம் தெரிவிப்பதாக ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
																						
     
     
    