free website hit counter

' தங்கப் பதக்கம் ' ஸ்ரீகாந்த் காலமானார்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1960-களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர், திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணி செய்து வந்தார்.

இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. மேலும் சிவாஜியின் மகனாக நடித்த ' தங்கப் பதக்கம் ' ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. 82 வயதானஸ்ரீகாந்த் கரோனா தொற்றுக்கு, ஆளாகி சிகிச்சை பெற்று மீண்டிருந்த நிலையில் திடீரெனக் காலமாகி விட்டதாக தெரிகிறது. திரை உலகினருக்கு தெரிவிக்காமலேயே அவரது உடலை அவரது குடும்பத்தார் எரியூட்டி விட்டனர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction