சிம்பு கதாநாயகனாக நடிக்கும் பத்து தல படத்தை, சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார்
இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் பிரபல நவீன கவிஞர் மனுஷ்யபுத்திரன். இவர் திமுகவில் கொள்கைபரப்பு பிரிவில் முக்கிய அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சிம்பு படத்தில் நடித்தது குறித்து இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அவர் தன்னுடைய பதிவில்" ' பத்து தல' படத்தில் ஒரு நடிகனாக எனது முதல் நாள் சூட் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருகிறேன். கெளதம் வாசுதேவன், ப்ரியா பவானிசங்கருடன் இன்றைய முதல் நாள் படப்பிடிபப்பு இருந்தது. ப்ரியா என் கவிதைகளை ஏராளம் வாசித்திருக்கிறார். அவை ஒரு ' தற்கொலை ஆல்பம்' என்றார். இயக்குனர் கிருஷ்ணாவுடன் வேலை செய்வது மிகவும் நட்பார்ந்த அனுபவம். திரைக்குப்பின்னே எவ்வளவு மனிதர்கள், எவ்வளவு வாழ்க்கை, எவ்வளவு கனவுகள், எவ்வளவு கதைகள்.
மனச்சோர்வு மிக்க நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்த வேலை மீண்டும் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் மீண்டு வருவேன். ஒரு நடிகனாக என்னை யோசித்ததேயில்லை. நடிக்கிறேன். என்னால் எதெல்லாம் முடியாதென்று நம்பப்படுகிறதோ அதையெல்லாம் செய்வேன்.
முதுகு வலிக்கிறது. சரியாகிவிடும். நாளை மறுபடி சூட். இரவு ' தாராவின் காதலர்கள்' எழுதவேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார். சூரிய புத்திரன் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.