free website hit counter

‘தாதா’வாக மாறிய துருவ் விக்ரம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரமும் அவருடைய மகன் துருவ் விக்ரமும் முதல் முறையாக இணைந்து நடித்துவரும் படம் ‘மகான்’.

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கடந்த மாதம் இந்தப் படத்தில் விக்ரம் நடிக்கும் கதாபத்திரத்திற்கான முதல் பார்வை காணொளி மற்றும் போஸ்டர் வடிவங்களில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை போஸ்டர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியீடபட்டுள்ளது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார். இதை போஸ்டர் ரீல் காணொளியாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

காணொளியில், துருவ் விக்ரம் கட்டுக்கோப்பான உடலுடன் தியானம் செய்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் துருவ் விக்ரமை தாதா என கார்த்திக் சுப்ராஜ் குறிவிட்டுள்ளார் இந்தப் படத்தில் விகரம் - துருவ் விக்ரம் ஆகியோருடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். அடுத்து ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கான முதல் பார்வை வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
 
 
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: