விஜய்சேதுபதி நாயகனாகவும் மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடிக்க, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் கனிகா நடித்திருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’.இந்தப் படத்தை இயக்கி வருபவர் ரோகாந்த். இந்தப் படத்தில் ‘தடையறத் தாக்க’படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்திருக்கிறார்.
கோரானா முதல் அலைக்கு முன்பே விஜய்சேதுபதி - மகிழ்திருமேணி மோதும் சண்டைக் காட்சியை கொடைக்காணலில் படமாக்கியிருக்கிறார்கள். அப்போது மகிழ் திருமேனி தாக்கியத்தில் விஜய்சேதுபதியின் முதுகுத் தண்டில் டிஸ்க் பிரச்சினை ஏற்பட்டு அவர் சிகிச்சை எடுத்துள்ளார். தற்போது படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்து போட்டுப் பார்த்தபோது அந்த சண்டைக்காட்சியின் பேச் ஒர்க் தேவைப்பட்டுள்ளது. இதனால் மகிழ் திருமேனி இல்லாமல் இந்த சண்டைக்காட்சியை டூப் சண்டைக்கலைஞர் வைத்து எடுத்து மேச் செய்ய இருக்கிறார்களாம்.
முதல்முறையாக வில்லனாக நடிப்பதால் உணர்ச்சி வசப்பட்டு மகிழ் திருமேனி வேகம் காட்டப்போய் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக படக்குழு வட்டாரத்தில் செய்தி கசிந்துள்ளது. படத்தில் மொத்த இரண்டு கதாநாயகிகள் அந்த இன்னொருவர் யார் என்பதை இன்னும் வெளிப்படுத்தாமல் வைத்துள்ளனர். கொடைக்கானலில் ஒரு பழங்கால சர்ச்சில் கதாநாயகியை, அந்த ஊருக்கு புதிதாக பிழைக்க வரும் நாயகன் சந்திக்கும்போது நடக்கிற சம்பவத்தில் தொடங்கும் கதையாம். கிறிஸ்துமஸ் பண்டிகை சீசனில் தொடங்கி ஈஸ்டரில் முடிவதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் இயக்குநர். இயக்குநர் மகிழ்திருமேனி நடிகராக ஒரு ரவுண்ட் வர இந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.