free website hit counter

உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கும் புதிய படம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும் தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இதுபற்றி கிருத்திகா உதயநிதி கூறும்போது:

“வணக்கம் சென்னை, காளி படங்களுக்கு பின் நான் இயக்கும் முன்றாவது படம் இது. சிறந்த கதை ஒன்று அமைய வேண்டும் என்று சிறிது காலம் எடுத்து கொண்டேன், அப்போது தோன்றியது தான் இப்படத்தை கதை. இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை, இக்கதையில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இளம் நடிகர்களை இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்கவைக்க முடிவு செய்தேன். அந்த கதாபாத்திரங்களுக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் தான்யா ரவிசந்திரன் கச்சிதமாக பொருந்தியிருந்தனர்.

மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவாளரான ரிச்சர்ட் M நாதன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கின்றார். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்படும்” என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction