‘அலிபாபா, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இயக்குநர் விஸ்ணுவர்த்தனின் தம்பியான கிருஷ்ணாவுக்கு நடிகர் என்ற அடையாளத்தைக் கொடுத்த படம் ‘கழுகு’.
எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவரது சம்பளம் 40 லட்ச ரூபாய் என்பதால் 2 கோடியில் இவரை வைத்து படமெடுத்தவர்கள் இரண்டு மடங்கு லாபம் சம்பாதித்துவிடுவதால் இவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைத்து வருகின்றன.
கைவசம் 5 படங்களை வைத்திருக்கும் கிருஷ்ணா, கொரோனா ஊரடங்கில் தன்னுடைய அம்மாவுக்கு தலைமுடியை திருத்தம் செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு: When ur mother wants a haircut and u have nothing else to do Person shrugging u rise to the occasion Winking face with tongueand become what ur mother needs u to become. In this case a stylist…. Stylist too much but she did like her haircu என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணாவுக்கும் கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் ஓராண்டுக்குள்ளாகவே தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்னும் முடியவில்லை. இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத் தக்கது.