free website hit counter

பச்சைக்கொடி காட்டிய கவுண்டமணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கவுண்டமணிக்கு நேற்று 83-வது பிறந்தநாள். சத்யராஜ் மற்றும் எழுத்தாளர் பாமரன் ஆகியோரின் நெருங்கி நண்பராக இருக்கும் கவுண்டமணி,

‘உருவக் கேலி’ வழியாக செந்திலைக் கலாய்த்து திரைப்பட உலகில் நகைச்சுவை ஸ்டாராக உயர்ந்தவர். கவுண்டமணியின் சொந்த ஊர் பொள்ளாட்சி அருகில் உள்ள கண்ணம்பாளையம். ஆனால், அவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

கவுண்டமணி சமூக வலைதளம் எதிலும் இல்லை எனும் நிலையில் அவரது பெயரால் இயங்கிவரும் 20 போலிக் கணக்குகள் தீவிரமாக சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் பதிவுகளை இட்டு வருகின்றன. இதற்கிடையில் பிறந்த நாள் வாழ்த்து கூறும்விதமாக இயக்குநர், நடிகர் மற்றும் தனுஷ் ரசிகர்மன்றத்தின் பொறுப்பாளர் சுப்ரமணியம் சிவா, கவுண்மணிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது கவுண்டமணி, பேசும்போது சுப்ரமணியம் சிவாவிடம் “ சிவா... உடனே கொரானா தடுப்பூசி போட்டுக்க.. நான் போட்டுகிட்டேன்.. தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். நான் சொன்னேன்னு சொல்லிடு.. எனக்கு முக்கியம் தரக்கூடிய நல்ல கதை வந்தால் உடனே நடிக்க ஒத்துகுவேன். என்னோட இந்த விருப்பதை உன்னோட வாட்டாரத்துல தாராளமா ஷேர் பண்ணிக்க” என்று கூறியிருக்கிறார். இதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சுப்ரமணியம் சிவா.. விரைவில் அவரை திரையில் வரவேற்போம் என்று கூறியிருக்கிறார்.

கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவருக்கு கவுண்டமணி என்கிற பெயரை வைத்தவர் பாரதிராஜா. 'சர்வர் சுந்தரம்' படத்தில் பேருந்து ஓட்டுநராக அறிமுகமான கவுண்டமணி. எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் துணை நடிகராக நடித்தவர். '16 வயதினிலே' படத்தில் வில்லனாக பரட்டை என்ற வேடத்தில் நடித்த ரஜினியின் நண்பராக நடித்தது முதல் எகத்தாளம் மிக்க நகைச்சுவை நடிகராக பிரபலமானார் 'பத்த வெச்சிட்டியே பரட்ட' என்று அந்தப் படத்தில் அவர் பேசிய வசனம்தான் கவுண்டமணியை பட்டிதொட்டி எங்கும் அறியவைத்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction