free website hit counter

வரும் 29ம் திகதி விவசாயிகளால் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரும் 29 ஆம் திகதி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

அண்மையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் என அரசியல் நோக்கர்கள், எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தாலும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக விவசாயி சங்கங்கள் கூறியதாவது:
எதிர் வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். வரும் 26 ஆம் திகதி டெல்லியில் உள்ள அனைத்து எல்லைகளிலும் விவசாயிகள் ஒன்று சேருவோம்

இதைத் தொடர்ந்து வரும் 29 ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,
இவ்வாறு கூறினர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: