free website hit counter

மொத்தமா 19 மணி நேரம் காலி - நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வழக்கம் போல அமளி துமளி, சஸ்பென்ஷன், முழக்கம் உள்ளிட்டவற்றுடன் நாடாளுமன்றத்தின்

குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளது.

லோக்சபா தொடரில் மொத்தமாக 19 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி விவகாரம் தொடர்பாக உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக இந்த நேரம் வீணாகியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முக்கியமான அம்சம் - வேளாண் சட்டங்களை நீக்கியதும், தேர்தல் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்ததுமே ஆகும்.

இன்றுடன் முடிவடைந்த குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், டிசம்பர் 2ம் திகதி லோக்சபாவின் செயல்பாடுகள் 204 சதவீதமாக இருந்தது. இது புதிய சாதனையாகும். ஒட்டுமொத்தமாக லோக்சபாவின் செயல்பாடு 82 சதவீத அளவுக்கு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது.

லோக்சபாவில் வேளாண் சட்டம் நீக்க மசோதா, தேர்தல் திருத்த மசோதா, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தும் மசோதா, துணை மானியக் கோரிக்கைகள் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

மொத்தம் 12 மசோதாக்களை அரசு அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமானது, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் சிறார் திருமண தடை சட்டத் திருத்த மசோதாவாகும்.

லோக்சபாவில் மொத்தம் 18 அமர்வுகள் நடைபெற்றன. இவை 83 மணி நேரம் 12 நிமிடங்கள் நடந்தன. கொரோனா தொடர்பாக 12 மணி 46 நிமிடங்களுக்கு விவாதம் நடந்தது. காலநிலை மாற்றம் தொடர்பாகவும் 6 மணி 26 நிமிடங்களுக்கு விவாதம் நடந்தது.

கொரோனா பேரிடர் காலம் குறித்த விவாதங்களில் 99 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். காலநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் 61 பேர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் அவைக்கு வந்திருந்தனர்.

லோக்சபா கூட்டத் தொடர் இப்படி இருக்க மறுபக்கம், ராஜ்யசபாவில் அமளி துமளியாக இருந்தது. எம்பிக்கள் சரமாரியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர். கூட்டத் தொடர் திருப்திகரமாக இல்லை என்றும், எங்கு தவறு எதில் தவறு என்பது குறித்து எம்பிக்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction