கேரள மாநிலத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தானது என்றும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்குவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை, 213 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் மட்டும் 57 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் மேலும் ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 6 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தில், 3 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.