போன வருடம் ஒரு தடுப்பணை கட்டி அந்த அணை சில மாதத்தில் உடைந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
விழுப்புரத்தில் 25 கோடிக்கு அணை கட்டி வெறும் 4 மாதங்களிலேயே பெயர்ந்து வந்து விட்டது!
உடைந்த அணையை திமுக அரசு வெடிவைத்து தகர்த்து. தற்போது அங்கே புதிய அணை கட்டி வருகிறார்கள். உடைந்த அணையை
கட்டியது வேறு யாருமில்லை, KP Park Slum Clearance வீடுகள் கட்டி மணல் மணலாக உதிர்ந்ததே அதை கட்டிய அதே PST நிறுவனம் தான்!
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அணை உடைந்ததை பார்வை இட்ட்டார். ஆனால், வழக்கு பதிந்து விசாரித்தல் கைது செய்தல் தண்டனை கொடுத்தல் போன்றவற்றை செய்து இருந்தால் கட்டுமான பணியை மேற்கொண்ட PST நிறுவனம், விசாரித்து கைது செய்து குற்ற வழக்கு பதியப்பட்டு, மேற்கொண்டு அரசு ஒப்பந்தங்கள் பெறுவதில் இருந்து தடை செய்யப்பட்டிருக்கும். அப்படி எதுவுமே நிகழவில்லை!
PST நிறுவனத்தின் இந்த ஊழல் திறமையை கண்டு வியந்து அப்போதைய துணை முதல்வரான ஓபிஸ் தனது துறையில் உள்ள ஏழைகளுக்கு 800 மேற்பட்ட வீடுகட்டும் ஒப்பந்தத்தை PST நிறுவனத்துக்கே வழங்க விரும்பினார். இந்த டெண்டரில் எங்காவது நல்ல நிறுவனம் போட்டியிட்டு குறைந்த செலவில் நல்ல வீடுகளை கட்டிக்கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்த ஓபிஸ், கார்த்திகேயன் IAS மூலம் அழகாக செட்டிங் டெண்டர் ஏற்பாடு செய்து PST நிறுவனம் மட்டுமே போட்டி இடும்படி பார்த்து கொண்டார்.
சுமார் 90 கோடிக்கு கட்டப்பட்ட இந்த வீடுகளில் வெற்றிகரமாக 27 கோடிக்கு மேல் சந்தை விலையை விட அதிகமாக கொடுத்து ஊழல் செய்து சுமார் 800 மேற்பட்ட குடும்பங்களின் தலையில் என்றைக்கு வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழலாம் என்ற தரத்தில் கட்டிக் கொடுத்தாயிற்று. (ஒரு மூட்டை சிமெண்டுக்கு 15 மூட்டை மணல் என்கிறார்கள்) மிக சிறந்த முறையில் கட்டியதற்காக ஒப்பந்தத்திலேயே இல்லாமல் 91 லட்சம் போனஸாக PST நிறுவனத்துக்கு வழங்கினார் அப்போதைய துறை செயலர் கார்த்திகேயன் IAS!
அந்த கார்த்திகேயன் IAS இன்று உயர்கல்வி துறை செயலாளராகவே வைத்து அழகு பார்க்கிறது முக ஸ்டாலினின் திமுக ஆட்சி!
மக்கள் பணத்தை திருடியதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கும்போது, ஓபிஸ், இபிஸ், சுதா தேவி IAS, கார்த்திகேயன் IAS, கிருஸ்டி, PST இன்னும் பல்வேறு துறை ஊழல்கள் என அனைத்தையும் ஆதாரம் இருந்தும் விசாரிக்காமல் திருடர்களை பாதுகாப்பதுடன் தொடர்ந்து பணி கொடுத்து ஒப்பந்தம் கொடுத்து வளர்த்து விடுவதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை திமுக முதல்வர் முக ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்க போகிறது.
4 தமிழ் மிடியாவுக்காக மாதுமை