free website hit counter

5-ம் ஆண்டு நினைவு தினம் - கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
சென்னை,

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணியாக சென்று, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: