free website hit counter

2021 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம் பிடித்த தலிபான் தலைவர்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால், தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் 2021 ஆம் ஆண்டின் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை டைம் பத்திரிகை தனது வருடாந்திர பட்டியலான '2021 ஆம் ஆண்டின் 100 செல்வாக்கு மிக்க நபர்கள்' என்ற பட்டியலை வெளியிட்டது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், டியூக் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோரின் உலகளாவிய தலைவர்களின் பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் இதில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர்களை உள்ளடக்கிய உலக தலைவர்கள் பிரிவில் முல்லா அப்துல் கனி பரதர் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார்.

கடந்தமாதம் ஆப்கானிஸ்தானின் தலைநகரை கைப்பற்றிய பின் பரதர் பேச்சுவார்த்தை நடத்தியது; முன்னாள் ஆட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, தலிபான்கள் ஆட்சியில் இனி இரத்தம் சிந்தாதது உட்பட அனைத்து முக்கிய முடிவுகளையும் அவர் எடுப்பதாக கூறப்படுகிறது. காபூல் மற்றும் அண்டை மாநிலங்கள், குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான ஆட்சியின் தொடர்புகள் மற்றும் வருகைகள் உள்ளிட்ட அம்சங்களை விவரித்து டைம்ஸ் பத்திரிகை எழுதியிருப்பது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction