புதிய கொரோனா வைரஸ்சுக்கு எதிராக கியூபா தயாரித்த அப்தாலா தடுப்பூசிக்கு வியட்நாம் நாடு ஒப்புதல் அளித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் கொரோனா தொற்றின் மோசமான நிலைமையை எதிர்த்து போராடிவருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வியட்நாம் நாடு கொரோனாவை கட்டுப்படுத்த கியூபாவின் அப்தாலா தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது, இது பிராந்தியத்தில் குறைந்த தடுப்பூசி விகிதங்களில் ஒன்றாகும். அப்தாலா வியட்நாமில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட எட்டாவது கோவிட் -19 தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் அவசரகால தடுப்பூசி பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்தாலா தடுப்பூசியின் மூன்று அளவுகள் 92.28 வீதம் செயல்திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரம் மாத இறுதியில் டெல்டா திரிபு ஏற்பட்டதிலிருந்து வியட்நாம் 667,650 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளையும் 16,637 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது