free website hit counter

ஜப்பானில் அடுத்த பயங்கரம் - தீப்பிடித்த பயணிகள் விமானம் !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்தில் 379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று தீவிபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் (சுவிட்சர்லாந்தில் காலை 10 மணி) வாக்கில், டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்பஸ் ஏ350 விமானம் பயங்கரமாகத் தீப்பிடித்தது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுவதற்காக  புறப்பட்ட ஜப்பானிய கடலோர காவல்படைக்கு சொந்தமான  விமானத்துடன் மோதியதில் இநத விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தலைநகருக்கு திரும்பியதாக அறியவருகிறது. விபத்து நடந்த  இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 8 குழந்தைகள் உட்பட 379 பயணிகளை வெளியேற்றும் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரையும்  பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction