free website hit counter

அமெரிக்க வளைகுடா கடற்கரை பகுதிகளை நெருங்கி வரும் ஐடா சூறாவளி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மெக்சிகோ வளைகுடாவில் இருந்து ஐடா சூறாவளி லூசியானா நோக்கி வேகமாக நெருங்கி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்,

ஐடா எனும் சூறாவளி தீவிரமடைந்து அமெரிக்க கடலோர பகுதிகளில் மணிக்கு 225 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நான்கு வகையாக சூறாவளி மிக உயர்ந்த மட்டத்திற்கு கீழே, 130mph (209 கிமீ/மணி) வரை தொடர்ந்து காற்று வீசுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஐடா சூறாவளி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது "உயிருக்கு ஆபத்தான" புயல் எழுச்சியைக் கொண்டுவருவதால் அப்பிரதேச மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2005 ஆம் ஆண்டில் நியூ ஆர்லியன்ஸின் பெரும்பகுதியை அழித்த கத்ரீனா சூறாவளியை விட வலுவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் அம்மாநில ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் 150 வருடங்களில் மாநிலத்தை தாக்கவுள்ள மிகப்பெரிய புயலாக இருக்கலாம் என்று எச்சரித்திருப்பது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula