நேற்று ஆப்கான் காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட 73பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற உள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள தமது நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. இதனுல் பல ஆப்கானியர்களும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் திரண்டவண்ணம் உள்ளனர்.
மீட்பு பணிகள் இடம்பெற்றுவரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு விமான நிலையத்திற்கு வெளியே இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க வீரர்கள் 13பேர் உட்பட 73பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என தெரிவித்து கண்டனம் வெளியிட்டுள்ளார்.