பிரபல அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார
கிருலபனை – சரணங்கர வீதியிலுள்ள தனது வீட்டிற்கான மின்சார கட்டணத்தை, குறித்த அமைச்சர் செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
குறித்த வீட்டிற்கான மின்சாரத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.
அத்துடன், மின்சாரத்தை துண்டிக்க முயற்சிக்கும் போது, அந்த வீட்டிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்பதாக, இவ்வாறான அமைச்சர்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஞ்ஜன் ஜயலால் குறிப்பிடுகின்றார்.
																						
     
     
    