முஸ்லிம்களின் ரமழான் நோன்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இப்தார் வைபவம்.
தேசிய நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதமும் அங்கு இடம்பெற்றது. கடந்த தசாப்தங்களில் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் முனைப்புடன் பங்களித்ததைப் போன்று, எதிர்காலத்தில் முன்னேறிச் செல்வதன் மூலம் வளமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களின் ஆன்மீக பலம் வலுவடைவதோடு, நாடுகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சமய உரைகளை ஆற்றிய இஸ்லாமிய மதத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.