இறுதி ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சீட்டில் ஆர்கஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. சீட்டில் ஆர்கஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 87 ரன்கள் குவித்தார். எம்.ஐ. அணி தரப்பில் பவுல்ட், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ. நியூயார்க் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஸ்டீவன் டெய்லர் 0 ரன், ஜஹாங்கீர் 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து கேப்டன் பூரன் மற்றும் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியில் மிரட்டிய பூரன் சீட்டில் ஆர்கஸின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இதனால் ரன் மளமளவென உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய பூரன் 55 பந்தில் 137 ரன்கள் குவித்தார். இதில் 13 சிக்சர்கள் அடங்கும்.
இறுதியில் எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 184 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
இதனால் எம்.ஐ அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பினாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பினாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.