free website hit counter

'இனிமேல்'..கெட்டிமேளம்தான்!

பாடல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

'இனிமேல்' காதலித்து கைகோர்த்து வாழ்க்கையை நடத்துவதெல்லாம் அவ்வளவாக சரிவராது. ஏனனில் அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில் காதல் திருமணங்களை விட தோழமைத்திருமணங்களை வரவேற்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறாதாம்.

இதனால் விவகாரத்து வழக்குகள் வெகுவாக குறைவதுடன் திருமணங்கள் அதிகரித்துள்ளதாம். 

பார்த்தவுடன் பிடித்துபோய் திருமணம் செய்துகொள்ளும் பலரின் வாழ்க்கை சாவல்களுக்குள் தள்ளிவிடுகிறது. ஆனால் ஒருவரின் குணநலனை கருத்தில்கொண்டு அமைத்துக்கொள்ளும் வாழ்வு நீண்டகால மற்றும் திருப்தியான உறவை பேணுகிறது. அதாவது, ஆர்வமுள்ள துணைகளை விட சிறந்த நண்பர்களைப் போன்ற வாழ்க்கைத் துணைகளை மக்கள் அதிகளவில் தேர்வு செய்கிறார்கள்

கடந்த இரண்டு தசாப்தங்களாக, வருடத்திற்கு 1,000 பேருக்கு திருமணபந்தகளின் எண்ணிக்கை 7 முதல் 8 வரை இருந்துவந்த நிலையில்  2020 ஆம் ஆண்டில், இந்த திருமண விகிதம் 1,000 பேருக்கு 5.1 ஆகக் குறைந்தாக தரவு காட்டுகிறது. அடுத்த ஆண்டு இந்த விகிதம் உயரத் தொடங்கியதுடன் 2022 ஆம் ஆண்டில், திருமணங்களின் எண்ணிக்கை 6.2 ஆகவும், ஒரு வருடத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமாகவும் இருந்தது என்று அறிக்கை கூறுகிறது. அதே ஆண்டு விவாகரத்து விகிதம் 1,000 பேருக்கு 2.4 ஆக இருந்தது என்றும் இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவானது எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தேசிய சுகாதார புள்ளியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இனிமேல்' புள்ளிவிபரம் எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதை விட இவர்களை பார்க்கலாமா!?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction