வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான நரம்பு ஏற்பிகளை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் ( David Julius) மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (Ardem Patapoutian) மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான நரம்பு சென்சார்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக வென்றனர்.
வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான நரம்பு ஏற்பிகளை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் ( David Julius) மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (Ardem Patapoutian) மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றியாளர்களாக டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
இவ் இருவரும் இயற்கையின் இரகசியங்களில் ஒன்றாக இருந்த வெப்பம், குளிர் மற்றும் இயந்திர சக்திகள் நரம்பு தூண்டுதல்களை எவ்வாறு தொடங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவதற்கான ஆதாரத்தை வழங்கியிருப்பதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் "நம் அன்றாட வாழ்வில், இந்த உணர்வுகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம், ஆனால் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை உணர நரம்பு தூண்டுதல்கள் எவ்வாறு தொடங்கப்படுகின்றன? இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்களால் இந்த கேள்வி தீர்க்கப்பட்டது" என கூறியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜூலியஸ், மிளகாயின் செயலில் உள்ள பாகமான கேப்சைசின் பயன்படுத்தி சருமத்தை வெப்பத்திற்கு பதிலளிக்க அனுமதிக்கும் நரம்பு சென்சார்கள் அடையாளம் கண்டுள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் பேராசிரியர் பூட்டியன், இயந்திர தூண்டுதலுக்கு பதிலளிக்கும் தனித்தனி அழுத்த உணர்திறன் செல்களை உயிரணுக்களில் அடையாளம் கண்டுள்ளார்.
இது உண்மையில் நம் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்று, எனவே இது மிக முக்கியமான மற்றும் ஆழமான கண்டுபிடிப்பு என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
உடலியல் அல்லது மருத்துவத் துறையில் கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கல்லீரலை அழிக்கும் ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது, இது ஒரு கொடிய நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் இரத்த வங்கிகள் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்க சோதனைகளுக்கு வழிவகுத்தது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குபவர்களும் இந்த ஆண்டு சிறந்த போட்டியாளர்களாக கருதப்பட்டனர்.
இந்நிலையில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பணிக்கான பரிசுகள் வரும் வாரத்தில் வழங்கப்படவுள்ளன.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    