உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நமது அன்றாட வாழ்க்கை பல்வேறு சவால்களை சந்தித்துள்ளதால் மன ஆரோக்கியம் பற்றிய முக்கியத்துவம் மேலோங்கியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் உட்பட பல முக்கிய பிரபலங்களிடமிருந்து இதன் தொடர்பாக சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் வந்துள்ளன; அதாவது அவர்கள் தங்கள் வேலையை விட மனநலத்திற்கு முன்னுரிமை அளித்திருந்தனர்.
உலகளாவிய விளையாட்டு ஆடைகளின் தயாரிப்பு நிறுவனமாக திகழும் நைக் அதன் ஊழியர்களுக்கு மிகவும் அவசியமான ஊதிய நேரத்தை வழங்குவதற்காக அதன் தலைமையகத்தை ஒரு வாரம் மூடுவதாக அறிவித்துள்ளது.
இதந்தொடர்பாக நைக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்: எமது மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரு தெளிவான அறிவிப்பை செய்கிறோம். ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வேலை செய்யாதீர்கள்! இது மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் எமது குழுவிற்கான ஒரு வார விடுமுறை மட்டுமல்ல இதனால் திறம்பட வேலை செய்ய முடியும் என்பதற்கான ஒப்புதல் இது என்றார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தலைமையிலான கூட்டு ஆய்வின்படி, 2016 ஆம் ஆண்டில் மட்டும், நீண்ட வேலை போக்கு 745,194 இறப்புகளுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் அறிக்கையின்படி, வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வது, "மனோவியல் சமூக அழுத்தத்திற்கும் இடம்கொடுக்கிறது. இதன் காரணமாக இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆக இந்த வகையான வேலை ஓய்வு மிகவும் தேவை என்பதில் சந்தேகமில்லை என கூறப்படுகிறது.
எனினும், தலைமை ஊழியர்களுக்கு நிறுவனத்தில் இருந்து ஒரு வார ஊதிய நேரம் கிடைக்கும் போது, சில்லறை விற்பனையாளர்கள் அதே சலுகையை பெறுவதில்லை என்று தெரிகிறது. நைக் கார்ப்பரேட் தலைமையகம் வாரத்திற்கு மூடப்பட்டாலும், நைக் கடைகள் திறந்திருக்கும் என்று தெரிகிறது. சில்லறை விற்பனைக் கடையில் பகுதி நேரத் தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,
இருப்பினும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த சூழல் எதிர்காலத்தில் நைக் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் இவ்வாறு முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்கும் போது, இந்த வகை முயற்சி மிகவும் பரவலாகி வருவதைக் காணலாம்.