நியூசிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ப நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் 6பேர் காயமடைந்தனர். இது அர்த்தமற்ற தீவிரவாத தாக்குதல் என நியூலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு மாகாணத்தில் உள்ள நகர்ப்பகுதியில் இருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கத்தியுடன் மர்பநபர் ஒருவர் திடிரென புகுந்துள்ளார். அங்கிருந்தவர்களை அவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அந்நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவ்விடத்திலே அந்நபர் பலியானார். கத்தி தாக்குதலுக்கு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நியூலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் "இன்று நடந்தது வெறுக்கத்தக்க செயல் என்றும் அர்த்தமற்ற வன்முறை என்றும் கூறியுள்ளார்.