மியான்மாரில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக USGS தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை (28.03.30 ) உள்ளூர் நேரம் மதியம் 12:50 மணிக்கு (06:20 GMT) இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. சாகைங் நகரின் வடமேற்கே 16 கிமீ (10 மைல்) தொலைவில் சுமார் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் இந் நடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் சக்தியால் சாலைகள் துண்டிக்கப்பட்டதாகவும், கட்டிடங்களிலிருந்து கூரைகள் துண்டுகளாக விழுந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மர் தீயணைப்பு சேவைகள் துறையைினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மியான்மரின் பண்டைய அரச தலைநகரான மண்டலேயின் புத்த மையப்பகுதியில், தெருக்களில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மியான்மரில் இருந்து தொடர்நுது மேலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள மண்டலே நகரில் ஏற்பட்ட சேதம் உண்மையிலேயே விரிவானது என்று மியான்மர் நவ் போர்டல் தெரிவித்துள்ளது. பல வானளாவிய கட்டிடங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மேலும் பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு பர்மாவின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் ஆறு பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மாரின் அண்டை நாடான தாய்லாந்திலும் இந் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த ஒரு உயரமான கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.