free website hit counter

குற்றத்தை ஒப்புக் கொண்டால் அசாஞ்சேக்கு விடுதலை ?

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சில வருடங்களின் முன், உலகெங்கிலும் அறியப்பட்ட பெயர் ஜூலியன் அசாஞ்சே. தற்போது பிரித்தானியாவின் பெல்மார்ஷ் சிறையிலுள்ள அவரை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்க கோரியுள்ளது.

அதற்கு எதிராக அசாஞ்சேயின் ஆதரவாளர்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இரகசியத் தகவலை தவறாகக் கையாண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டால்,  பிரிட்டிஷ் பெல்மார்ஷ் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகலாம் என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.  

இதன்படி,  அமெரிக்க நீதித்துறை உளவு சட்டத்தின் கீழ் 18 குற்றச்சாட்டுகளை கைவிட வாஷிங்டன் ஒப்புக் கொள்ளலாம் என்று வணிக நாளிதழான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இதற்கான முயற்சிக்கு, அசாஞ்சே லண்டனில் இருந்து விண்ணப்பிக்கலாம், எனவும் அவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை குறைக்கப்பட்டால்,  ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும்,  ஏற்கனவே அந்தக் காலத்தை சிறையில் அவர் கழித்திருப்பதால், உடனடியாக விடுதலையாகிவிடும் சாத்தியம் உண்டெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ஆனால் இத் தகவலை விக்கிலீக்ஸ் சட்டக் குழு  மறுக்கிறது. 2019 இல் அமெரிக்க நீதிபதிகளால் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு, அசாஞ்சேவுக்கு எதிரான கோப்பின் சாத்தியமான தீர்வுக்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லையென  வழக்கறிஞர் பாரி பொல்லாக் விளக்குகிறார். மேலும்   அசாஞ்சேயின்  வழக்கு இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இருக்கும்போது கருத்து தெரிவிக்க, நீதித்துறை அவ்வாறு செய்ய விரும்பும் சாத்தியமில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கான அசாஞ்சேயின் உரிமை குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர் வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் அமெரிக்க மண்ணுக்கு வந்தவுடன் அவர் விசாரணைக்கு வந்தால், அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction