free website hit counter

100 றோஹிங்கியா அகதிகளுடன் கூடிய படகை அனுமதித்தது இந்தோனேசியா!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெள்ளிக்கிழமை காலை சுமார் 100 இற்கும் அதிகமான றோஹிங்கியா அகதிகளுடன் கூடிய படகு இந்தோனேசியாவின் மேற்குக் கடற்கரையைக் கரை தட்டிய போது அதில் இருந்த அகதிகள் தமது நாட்டுக்குள் நுழைய அனுமதித்துள்ளனர் அதிகாரிகள்.

இதற்குப் பின்னால் சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் இருந்திருக்கலாம் என்று கருதப் படுகின்றது.

இந்தப் படகில் வந்த 105 அகதிகளில் 50 பெண்களும், 47 குழந்தைகளும் கூட இருந்ததாகத் தெரிய வருகின்றது. இந்த அகதிகள் அனைவரும் சுமார் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டு மருத்துவ சோதனைகளின் பின்பே மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப் படுவர் என்றும் தெரிய வருகின்றது. இந்த அகதிகள் வந்த படகானது அகெஹ் மாகாணம் அருகே சுமார் 28 நாட்கள் கடலில் இருந்ததாகவும், இதில் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களும் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக இந்தப் படகைத் திசை திருப்பி மீள அனுப்பவே அதிகாரிகள் திட்டமிட்டதாகவும் ஆனால் பின்பு UNHCR மற்றும் அம்னெஸ்டி போன்ற அமைப்புக்களின் கடும் அழுத்தத்தால் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் காட்டுத் தீ காரணமாக சுமார் நூற்றுக் கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு வரலாற்றில் இல்லாத வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில், சுமார் 1600 ஏக்கர் நிலம் ஏற்கனவே பௌல்டர் பகுதியில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் 370 இற்கும் அதிகமான வீடுகள் அழிவை சந்தித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction