free website hit counter

உக்ரைனின் மரியுபோலில் மனிதாபிமானப் பேரழிவு : ICRC

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைனில் ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால், மரியுபோலில் ஒரு மனிதாபிமான பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு (ICRC) எச்சரித்துள்ளது.

நகரில் உணவு, தண்ணீர், மருந்துகள் போன்ற அடிப்படைப் பொருட்கள் இல்லை என்ற மிக மோசமான நிலை உள்ளது. பொதுமக்கள் மற்றும் போராளிகளின் உயிரற்ற உடல்கள் இடிபாடுகளுக்கு அடியிலும் திறந்த வெளியிலும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. வெகுவிரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், நூறாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மோசமான சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. என்று ICRC எச்சரித்துள்ளது.

" நடைபெறும் சண்டையின் பங்கேற்பாளர்கள் அனைவரும் போர்நிறுத்தத்தின் முறைகள் .மற்றும் நேரம் மற்றும் துல்லியமான இடங்கள் ஆகியவற்றில் விரைவாக உடன்பட வேண்டும். நூறாயிரக்கணக்கானவர்களுக்கு இந்தத் துன்பத்தின் இறுதிநேரங்களில் சிக்கியுள்ளார்கள்", எனச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் சைரன்கள் மீண்டும் ஒலித்தன. நாட்டின் 24 மாகாணங்களில் குறைந்தது 19 மாகாணங்களில், இரஷ்ய பீரங்கிகளின் வெடிப்பு தீவிரமாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் உக்ரைனில் என்ன நடக்கிறது..?

இது ஒரு புறமிருக்க, இந்தப் போர் தொற்றுநோயை மோசமாக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. உக்ரேனிய தடுப்பூசி விகிதம் 34% எனும் நிலையில் அங்கு நடக்கும் போர் கோவிட்-19 நிலைமையை மோசமாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து கவலைப்படுவதாக அது அறிவித்துள்ளது.

போர் கடுமையாக நடந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளும் நடைபெற்ற வண்ணமுள்ளன. அந்த வகையில் இன்று சீனாவும் அமெரிக்காவும் இந்த யுத்தம் தொடர்பில் சந்தித்துப் பேசவுள்ளன.

இத்தாலியின் தலைநகர் ரோமில், உக்ரைன் போர் குறித்து விவாதிக்க அமெரிக்கா மற்றும் சீனா பிரதிநிதிகள் கூடுகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜதந்திர தலைவர் யாங் ஜீச்சி ஆகியோர்இந்தச் சந்திப்பின் முக்கிய பிரதிநிதிகளாக இருப்பார்கள். ஆசிய நாட்டிற்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா கோரியுள்ளதாக வதந்திகள் பரவியதை அடுத்து அவசரமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேசமயம் உக்ரேனிய மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கிடையிலான நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இன்று காலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கியேவில் காலை 10.30 மணிக்கு (சுவிட்சர்லாந்தில் காலை 9.30 மணிக்கு)  மீண்டும் தொடங்குகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில், உள்துறை மந்திரி அன்டன் ஜெராஷ்செங்கோவின் ஆலோசகரின் டெலிகிராம் சேனலில் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கட்சியின் தலைவர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என  கிய்வ் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula